இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் ஆனந்த வெடிசிங்க காலமானார்

  • May 30, 2017
  • 610
  • Aroos Samsudeen

image title

இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரரான ஆனந்த வெடிசிங்க இன்று (29) இயற்கை எய்தினார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை இயற்கை எய்தியதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா ஓடுபாதையில் அண்மையில் நடைபெற்ற மோட்டார் பந்தயத்தில் ஆனந்த வெடிசிங்க விபத்திற்குள்ளாகியிருந்தார்.

இதனையடுத்து கண்டி தேசிய வைத்தியசாலையில் ஆனந்த வெடிசிங்க தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முதுகெலும்புக்கும் தலைக்குமிடையிலான உடற்பாகம் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலமானதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் மோட்டார் பந்தயத்தில் நட்சத்திர வீரராக திகழ்ந்த ஆனந்த வெடிசிங்க பொக்ஸ் ஹில் பந்தயத்தில் 08 தடவைகள் சாம்பியனாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments