வௌ்ளம், மண்சரிவால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

  • May 30, 2017
  • 532
  • Aroos Samsudeen

//images/s/ title

நாட்டில் அதிக மழையுடனான வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக மேலும் 110 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, சீரற்ற வானிலையால் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்த நிலையால் இடம்பெயர்ந்த 75,366 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
comments