குமாரி குரே விடயத்தில் பசீர் சேகுதாவுத் சொல்வது பொய்யா?

  • May 30, 2017
  • 831
  • Aroos Samsudeen

//images title

(எம்.எல்.சிஹாப் – நிந்தவுர்)

அமைச்சர் ரவுப் ஹக்கீம் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார்.

2005ம் ஆண்டு தலை நோன்பு தினத்தில் குமாரி குரே அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களது வீட்டின் முன்னாள் எரிந்து இறந்து போனதாகவும் குமாரி குரேயிக்கு நீதி வேண்டி அமைச்சர் ஹக்கீமின் வீட்டின் முன்னாள் பெண்கள் அமைப்புக்கள் பலவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகவும் சமூக நன்மை கருதி அதனை தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய கட்சி ஒன்றின் தலைவராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் உள்ள ரவுப் ஹக்கீம் அவர்களின் நடத்தையிலும், மார்க்க செயற்பாட்டிலும் கேள்விக்குட்படுத்தும் வகையில் பசீர் சேகுதாவுதீன் பேஸ்புக் பதிவு அமைந்துள்ளது.

இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிப் போராளிகள் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவுதீன் பேஸ்புக் பதிவையும், அவரையும் சாடி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோ  அவரும், கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களும் நேரடியாக பசீர் சேகுதாவுதை விமர்ச்சிக்க முற்படவில்லை. இது விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரோ அல்லது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தோ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இவர்கள் இணைந்துதான் தாறுஸ்ஸலாம் விடயத்தில் எதிர்ப்பு புத்தகம் வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பசீர் சேகுதாவுத் குறிப்பிட்டிருப்பது போல எதிர்காலத்தில் ஏதாவது நடப்பதற்கு முன்னர் இவ்வாறான விடயங்கள் பொய்யானது என்பதை அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அறிக்கை விட வேண்டும் என  அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

Tags :
comments