அமைச்சரவைப் பேச்சாளராக தயாசிறி

  • May 31, 2017
  • 1132
  • Aroos Samsudeen

//images title

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை இணைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே, அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், நேற்றுப் பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதன்படி, இன்று நடைபெறவுள்ள, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், அமைச்சர் தயாசிறி பங்குகொள்வார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

Tags :
comments