அக்கரைப்பற்று அபிவிருத்தி நிகழ்வு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு வெற்றி

  • September 17, 2017
  • 748
  • Aroos Samsudeen

/images/ title

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் முன்னடுப்பில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மரம் வளர்ந்த மண் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு மிகவும் திறமையான முறையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தி மக்களின் நலனில் அக்கரை கொண்டுள்ள மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அக்கரைப்பற்றில் மறுவாழ்வு கொடுத்துள்ளமை நிருபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரே பேஸ்புக் பக்கங்களில் தங்களுக்கு விரும்பியவாறு எழுதி வருகின்றனர்.

அபிவிருத்திப் பெருவிழா பொதுக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் உரையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் ஆதரவாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
comments