பதவி இழக்கும் முதலமைச்சர் நஸீர் அஹமட்

  • September 19, 2017
  • 960
  • Aroos Samsudeen

Image title

கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதால் உடனடியாக தேர்தலை நடத்தும் செயற்பாட்டை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகின்றது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஏற்பட்ட நிலைமையே கிழக்கு மாகாண சபைக்கும் வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண சபையின் தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் பதவிகள் இல்லாத நிலை வரவுள்ளது.

அதேபோன்று மட்டக்களப்பில் அதிகார மமதையில் பல அரசியல்வாதிகளையும் புறக்கணித்து செயற்பட்ட முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு பதவியில்லாத நிலை மிகக் கஸ்டமான காலமாக மாறவுள்ளது.

தமது இரண்டு வருட பதவிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்ட கிழக்கு மாகாண கொடி விவகாரத்தைக்கூட முதலமைச்சர் எடுக்கவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.

Tags :
comments