தூய முஸ்லிம் காங்கிரஸூடன் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சந்திப்பு

  • September 19, 2017
  • 1460
  • Aroos Samsudeen

Image title

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது மிக வேமாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கும்,தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் ஏ.எல்.எம்.அதாஉல்லா, எம்.ரி.ஹசன் அலி,பசீர் சேகுதாவுத்,நஸார் ஹாஜியார்,சட்டத்தரணி எம்.ஏஅன்ஸில் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் கூட்டு ஒன்று ஏற்படுவதற்கு முதல் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருமித்து குரல் கொடுப்பதற்கும்,பிரச்சாரத்தை முன்னடுப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
comments