20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்: சில சரத்துக்களை நடைமுறைப்படுத்த மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம்

  • September 19, 2017
  • 736
  • Aroos Samsudeen

Image title

மாகாண சபை தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது தொடர்பிலான 20 ஆவது அரசியலமைப்பு திருத்ததின் சரத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அந்த சரத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் கருத்துக்கணிப்புடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

Tags :
comments