புதிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு விளையாட்டுத் துறை அமைச்சு அனுமதி

  • September 19, 2017
  • 756
  • Aroos Samsudeen

Image title

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரைத்துள்ள தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு விளையாட்டு துறை அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது.

க்ரஹம் லெப்ரோய் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், காமினி விக்கிரமசிங்க, ஜெரி வவுட்டர்ஸ், சஜித் பெர்ணான்டோ, அசங்க குருசிங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தெரிவுக்குழு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிரிககெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியாத்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
comments