இப்பொழுது உங்கள் “சுடர் ஒளி“ இணையத்திலும்

  • September 20, 2017
  • 636
  • Aroos Samsudeen

Image title

தமிழ் பேசும் மக்களின் தன்மான நாளிதழான சுடர் ஒளி பத்திரிகையின் இணையதளம் இன்று காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சுடர் ஒளி பத்திரிகையின் தலைமை அலுவலகத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்      ஈ.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், இந்தியத் தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் அரசியல் பிரிவு தலைமை அதிகாரி ரமேஸ் பாபுவும்,  சீன தூதரகத்தின் சார்பில் அதன்  அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி கியூ சிங்லியும் கலந்துகொண்டனர்.

Tags :
comments