அஷ்ரபின் 05 சதவீதமும் – றஊப் ஹக்கீமின் 50:50 விகிதமும்; அணுகுமுறைகள் வேறானாலும் இலக்கு ஒன்றே – ஏ.எல்.தவம்

  • September 26, 2017
  • 659
  • Aroos Samsudeen

Image title

அன்று விகிதாசார தேர்தல் முறைமையில் தேர்தல்களை நடத்த சட்டம் இயற்றப்பட்ட போது; தலைவர் மர்ஹூம் அஷ்ரப் வெட்டுப்புள்ளியை 12.5 வீதத்திலிருந்து 05 சதவீதமாகக் குறைத்து முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் முனைந்தார்.

இன்று தொகுதிரீதியிலான கலப்புப் பிரதிநிதித்துவ முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த சட்டம் இயற்றப்படுகின்ற போது; தலைவர் றஊப் ஹக்கீம் 60:40 விகிதத்தை மாற்றி 50:50 என்ற விகிதமாக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் முனைகிறார்.

இரண்டும் ஒரே செயல்தான். இருவருமே முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவுமே முனைந்துள்ளனர். இரு முயற்சிகளும் முஸ்லிம் காங்கிரஸால் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் தனது இலக்கில் தடம் புரளாமல் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமே.

முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் இயக்கத்தைக் கருவறுக்க நினைப்பவர்களும் – மகிந்தவாதிகளும் – கொண்டு வரப்பட்டுள்ள மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் போதியளவு விடய அறிவு அற்றவர்களும் – குறுட்டுத்தனமாக எடுத்ததெற்கெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் மீது பழி சொல்பவர்களுமே, இன்று தாறுமாறாய் முஸ்லிம் காங்கிரஸ் மீது இவ்விடயத்தில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் – தலைவர் அஷ்ரப் காலத்தில் வெட்டுப்புள்ளியை 05 சதவீதமாகக் குறைத்ததும்; தற்போது றஊப் ஹக்கீம் அவர்களுடைய காலத்தில் 50:50 என்ற விகிதமாகக் கொண்டு வருவதும்; ஒரே நோக்கமுடைய சம முயற்சிகளே. அணுகுமுறைகள் வேறாக இருப்பினும் இலக்கு ஒன்றே.

அதாவது, முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவுமே என்பதே யதார்த்தம்.

அரசியல் குருட்டுத்தனத்திற்கு அறவே மருந்து கிடையாது.

(தெளிவு தொடரும்)

Tags :
comments