மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கு மூன்றாவது நாளாக மக்கள் எதிர்ப்பு

  • September 30, 2017
  • 386
  • Aroos Samsudeen

Image title

குருணாகல் – ஹேனேமுல்ல பகுதி மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கு இடமளிக்கவில்லை.

உரிய மதிப்பீட்டின் பிரகாரம் தமக்கு நட்ட ஈடு வழங்கப்படவில்லை எனவும், கனுமத வீதியைப் புனரமைக்க மண் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதால், வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இதற்கு தீர்வு காண்பதற்காக வீதி நிர்மாணத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இன்று குருணாகல் நய்லிய விகாரையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவடைந்ததாக மக்கள் கூறினர்

Tags :
comments