பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தினேஷ் சந்திமால் அபார சதம்

  • September 30, 2017
  • 559
  • Aroos Samsudeen

Image title

தினேஷ் சந்திமாலின் அபார சதத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை 419 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

அபுதாபி ஷெய்க் ஷாஹிட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களுடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 60 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 42 ஓட்டங்களுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

இவர்கள் ஐந்தாம் விக்கெட்டுக்காக 134 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தனது ஆறாவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்த நிரோஷன் திக்வெல்ல 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் தனது 9 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து 155 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

பந்து வீச்சில் மொஹமட் அப்பாஸ், யஷீர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags :
comments