சிராஸ் மீராசாஹிபிற்கு மேயர் பதவி வழங்க அமைச்சர் ரவுப் ஹக்கீம் இணக்கம்

  • October 14, 2017
  • 1705
  • Aroos Samsudeen

Image title

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான சிராஸ் மீராசாஹிப் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு வீழ்ச்சியான நிலை காணப்படுவதால் சிராஸ் மீராசாஹிபை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் விரும்பியுள்ளார்.

அடாத்தாகப் பறிக்கப்பட்டதாக சொல்லப்படும் மேயர் பதவியை மீண்டும் சிராசுக்கு வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டால் உள்ளுராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதை கட்சியின் தவிசாளர் முழக்கம் அப்துல் மஜீத் மற்றும் சாய்ந்தமருது அமைப்பாளர் பிர்தௌஸ் ஆகியோர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியாக்கப்பட்டுள்ளதால் கட்சி மாறும் படலம் இம்முறை அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

Tags :
comments