நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் இளம்பெண் ஜெசிந்தா அர்டென் தெரிவு

  • October 20, 2017
  • 471
  • Aroos Samsudeen

Image title

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார்.

மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.

நியூசிலாந்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நிலவி வந்தது.

இந்நிலையில், ”நியூசிலேன்ட் பெஸ்ட்” எனும் சிறிய கட்சியொன்று அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முன்வந்ததையடுத்து, தொழிலாளர் கட்சியின் ஜெசிந்தா அர்டென் பிரதமராகத் தெரிவாகியுள்ளார்.

அவர் கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வந்தார்.

1856 ஆம் ஆண்டின் பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார் ஜெசிந்தா அர்டென்.

Tags :
comments