முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் மிரட்டலுக்கு அடிபணிவாரா???? மு.கா.தலைவர்.

  • October 20, 2017
  • 844
  • Aroos Samsudeen

Image title

(Misbahul Haq Abdul Kareem)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் ஒலுவிலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதலமைச்சர் தனக்கு அதிகாரம்(MP) தன்னுடைய அடிவருடிகளை சில பிரதேசங்களில் இருந்து சுமார் 8 வேன்களில் அழைத்துச் சென்றார். இந்த குழுவில் கல்குடாவில் இருந்து கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் தலைவர் ரவூப் ஹக்கீம் எதுவித பதிலும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் தனக்கு தேசியப் பட்டியல் தரவேண்டும் அதற்கு கல்குடா மக்களும் பூரண ஆதரவு என்பதை தெரிவிப்பதற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரையும்,முன்னாள் கோறளை பற்று மேற்கு தவிசாளர் ஹமீட் அவர்களையும் முதல்வருக்கு தேசிய பட்டியல் கொடுப்பதற்கு கல்குடா முழுக்க ஆதரவு என்ற பேச்சுகளை முடக்கிவிடுமாறு முதலமைச்சர் பணித்திருக்கிறார். வெள்ளிக்கிழமை இன்று (20) வரைதான் தலைவருக்கு நேரம் கொடுத்திருக்கிறார்.

அவ்வாறு தராவிட்டால் தான் மாற்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டி வரும்(UNP இணைவு). என்றும், தனக்கு தேசிய பட்டியலை தந்தால் பிரதமருடன் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அமைச்சு ஒன்றை எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இத் தகவல் முன்னாள் முதல்வரின் நெருங்கிய சகா ஒருவரே தெரிவித்தார்.

தற்போது மு.கா. தலைவர் இந்த மிரட்டலுக்கு அடிபணிந்து தேசியபட்டியலை கொடுப்பாரா???? ஏற்கனவே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏறாவூரில் இருக்கத்தக்கதாக மீண்டும் ஒருவருக்கு வழங்குவது நியாயமா???? தனி நபர்களை திருப்தி படுத்துவதுதான் தலைவரின் பணியா???? ஏறாவூரின் அரசியலுக்கு (அன்று பஸீர்,இன்று நஸீர்) தொடர்ந்து மு.கா.தலைவர் அடிமையா???

கிழக்கு மக்களின் அபிலாஷைகளை இவ்வாறுதான் தலைமை குழிதோண்டி புதைக்குமா????வாக்குறுதி வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலை என்ன??? என்ற கேள்விகளுடன் அரசியல் அவதானிகளும்,புத்தி ஜீவிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Tags :
comments