வரி செலுத்தாத மேலதிக வகுப்பு ஆசிரியர்களை கண்டறிவதற்கு நடவடிக்கை

  • October 24, 2017
  • 375
  • Aroos Samsudeen

Image title

வரி செலுத்தாத தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்களை கண்டறிவதற்கு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் வரி செலுத்துவதில்லை என திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் நதுன் கமகே கூறியுள்ளார்.

வரி எல்லையை மீறி இவர்கள் வருமானம் ஈட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட செயலகங்களூடாக அவ்வாறான ஆசிரியர்களை இனங்கண்டு வரி ஆவணங்களை பரிசீலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் நாயகம் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை வரிச் செலுத்துவது தொடர்பில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்களை தௌிவூட்டும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது 80 -20க்கு இடையில் காணப்படும் மறைமுக வரி மற்றும் வருமான வரி வீதத்தை 60-40 வீதமளவில் பேணுவதே இதன் இலக்காகும் .

 

Tags :
comments