உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும்

  • October 31, 2017
  • 3065
  • Aroos Samsudeen

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்று அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தமானி அறிவித்தல் வந்ததன் பின்னர் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கொள்ளவுள்ளார்.

நீண்டகாலமாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் பிற்படுத்தி வருவதையிட்டு கட்சிகளும், பொது அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்து வந்தமை எல்லோரும் அறிந்த விடயமாகும்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் புதிய வட்டார முறையில் இடம்பெறவுள்ளதால் கட்சிகளுக்கிடையில் பலத்த போட்டியை எதிர்பார்க்கலாம்.

Tags :
comments