சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை

  • October 31, 2017
  • 701
  • Aroos Samsudeen

Image title

(எஸ்.எம்.அறூஸ், எம்.எப்.நவாஸ்,றியாத் ஏ மஜீத்)

சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தக்கோரி இன்று இரண்டாவது நாளாக பள்ளிவாசல் முன்னாள் வீதியினை மறித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

மேலும் வீதி மறியல் போராட்த்தினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டன.

இப்போராட்டம் மூன்று நாளைக்கு மேற்கொள்வதன சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் முடிவெடுத்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் கொட்டும் மழையையும் பாராது தீவிரமடைந்துள்ளன.

மேலும் வீதி மறியல் போராட்டத்தினை கைவிடுமாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் குழுவினர் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் பள்ளிவாசல் நிர்வாகம் இதற்கு இணங்கவில்லை. மேலும் போராட்டத்தை கைவிடுவதாயின் எங்கள் கோரிக்கையினை ஏற்று ஜனாதிபதி அவர்கள் உத்தரவாதமளித்து சபைக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் இறுதி நாளான நாளை (01) சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் போராட்டம் பல வடிவங்களில் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகின்றது.

Image title

Image title

Image title

Tags :
comments