ஆலையடிவேம்பு, சம்மாந்துறைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

  • December 15, 2017
  • 317
  • Aroos Samsudeen

Image title

இலங்கை தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளுக்காக அக்கட்சி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அக்கரைப்பற்று நகர சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
comments