பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக வீதியின் நிர்வாக அதிகாரிகளின் விடுமுறை இரத்து

  • December 18, 2017
  • 324
  • Aroos Samsudeen

Image title

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக வீதியின் நிர்வாக அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் மேலும் நுழைவாயில்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வை பிரிவின் முகாமையாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் பண்டிகைக் காலத்தில் அதிவேக வீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வை பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
comments