தேசியப்பட்டியல் எம்.பி தொடர்பில் அமைச்சர் ஹக்கீமை சந்திக்கத் தீர்மானம்

  • December 18, 2017
  • 630
  • Aroos Samsudeen

Image title

தேசியப்பட்டியல் எம்.பி பதவியை அட்டாளைச்சேனைக்கு வழங்குமாறு கோரி கட்சித் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமை சந்தித்து அழுத்தம் கொடுப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச கட்சி முக்கியஸ்தர்களும், வேட்பாளர்களும் தீர்மானித்துள்ளனர்.

இன்று மதியம் ஒலுவில் கிறின்விலா விடுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சியின் வேட்பாளர்களை வெல்ல வைப்பதற்கான திட்டங்களையும் இங்கு தீட்டியுள்ளனர்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், உயர்பீட உறுப்பினர்களான முன்னாள் ஸ்தாபக செயலாளர் நாயகம் எஸ்.எம்.ஏ.கபுர், சிரேஸ்ட கல்வியதிகாரி யு.எம்.வாஹித் உட்பட முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Tags :
comments