புறத்தோட்ட வட்டாரத்தில் அதிகப்படியான வாக்குகளினால் ஏ.பீ.தீனுல்லாவுக்கு வெற்றி

  • December 26, 2017
  • 676
  • Aroos Samsudeen

Image title

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் புறத்தோட்டம் வட்டாரத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும்,சமூக சேவையாளருமான ஏ.பீ.தீனுல்லாவை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

புறத்தோட்டம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளரும், முன்னாள் சிறைச்சாலைகள் உத்தியோகத்தருமான உதுமாலெப்பை முனாப் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதன்மை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உட்பட ஏனைய வட்டார வேட்பாளர்களும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

புறத்தோட்டம் வட்டாரத்திற்குட்பட்ட பொதுமக்கள் இக்கூட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டமை ஏ.பி.தீனுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

புறத்தோட்டம் வட்டாரத்திற்குட்பட்ட புறத்தோட்டம்,மீனோடைக்கட்டு, ஆலம்குளம்,சம்புநகர், முல்லைத்தீவு மற்றும் 5ம் பிரிவு பகுதிகளில் பெருமளவில் ஏ.பீ.தீனுல்லாவிற்கு ஆதரவு காணப்படுவதுடன் மக்களின் மனங்களையும் வென்று வருகின்றார்.

இங்கு வேட்பாளர் ஏ.பி.தீனுல்லா மிகச்சிறப்பான உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.Image title

Image title

Image title

Image title

Image title

Image title

Image title

Image title

Image title

Tags :
comments