வில்பத்து எல்லைப்பகுதியில் மேலும் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

  • December 27, 2017
  • 476
  • Aroos Samsudeen

Image title

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப்பகுதி அழிக்கப்பட்டு வீடமைப்புத் திடட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

புத்தளம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு வீடமைப்புத் திட்டம் இடம்பெறுவதாக சுற்றாடல் துறைசார் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

இந்த குற்றச்சாட்மை நிரூபித்தால் தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விடை பெறுவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இன்று சவால் விடுத்தார்.

மன்னார் மறிச்சிக்கட்டி பிரசேத்தில் இருந்து புத்தளம் எழுவான்குளம் பிரதேசம் வரையான 10 கிலோ மிற்றர் வனப்பகுதியில் வில்பத்து வலையத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இங்கு அமைக்கபட்ட சில வீடுகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வீதி ஒன்றை கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதே வேளை கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட விலத்திக்குளம் சரணாலயம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கண்காய்வாளரினால் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Tags :
comments