வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் – ஜெமீல் அகமட்

  • December 31, 2017
  • 613
  • Aroos Samsudeen

Image title

சகோதரர் YLS ஹமீட் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

நாம் விரும்பும் பதவிகள் என்பது அல்லாஹ் தருவது தவிர அமைச்சர் றிசாத் அவர்களோ மற்றவர்களோ எமக்கு தருவது இல்லை என்பதை நீங்கள் அறிந்தும் பதவியை தேடி நீதிமன்றம் செல்வது என்பது உலக நீதிபதியான அல்லாஹ்வை மறந்தவர்கள் செய்யும் காரியம் அதை நீங்கள் தொடர்ந்து செய்யக்கூடாது

கடந்த காலங்களில் நீங்கள் எமது சமுதாயத்தின் நலனுக்காக அரசியல் செய்த காலம் என்பது ஒரு பொண்னான காலம் அதை இன்றும் மக்கள் நினைவுகூர்ந்து பேசுகின்ற நிலையில் அன்மைக் காலமாக நீங்கள் செல்லக் கூடாத இடமான நீதிமன்றத்துக்கு அடிக்கடி சென்று எமது சமுதாயத்தின் நலனுக்காக அரசியல் செய்யும் ஒரு மனிதனின் அரசியலை குழி தோன்றி புதைக்க முற்படுவதையிட்டு மக்கள் மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்

நீங்கள் கிழக்கில் ஒரு சமுதாய சிந்தனைவாதி மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் கொள்கைவாதியாக இருந்தும் தான் எடுக்கும் முடிவை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கைவாதியாக நீங்கள் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது அதனால் நீங்கள் சிறந்த ஒரு நன்பனை பகையாளியாக பார்க்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வெறுக்கின்ற பகையாளி உங்கள் மீது அன்பு பாசம் கொண்ட நன்பன்(#அடிக்கிற #கையே #அனைக்கும் ) என்பதை மறந்துவிடாதீர்கள்

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் சுதந்திர காற்றை சுவாசித்த எமது சமுதாயம் இன்று நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய காலத்தை தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஏற்படுத்தியுள்ளார் அதனால் எமது சமுதாயம் பல பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டிய நிலையுள்ளது என்பது உங்களுக்கும் தெரிந்தும் அதிலிருந்து எமது சமுதாயத்தை விடுவிக்க துடிக்கும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக நீங்கள் செயல்படுவது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நீங்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பது எமது சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.

எனவே எமது சமுதாயத்துக்காக இன்று குரல் கொடுக்கின்ற ஒரு அரசியல்வாதியாக அமைச்சர் றிசாத் மட்டுமே இருக்கின்றார் என்பது உங்களுக்கு தெரியும் அதனால் நீங்கள் உள்மனதோடு அவர் மீது அன்பு பாசம் வைத்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் அது போல் அமைச்சர் றிசாத் அவர்கள் உங்கள் மீதும் அன்பும் மரியாதையும் வைத்து இருக்கின்றார் என்பது அவரின் அறிக்கைகள் மூலம் அறிந்து கொண்ட நான் நீங்கள் இருவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என விரும்புகிறேன்

ஹக்கிடமிருந்து எமது சமுதாயத்தை பாதுகாக்க அமைச்சர் றிசாத் அவர்களின் வழிகாட்டல் உங்கள் ஆலோசனைகளால் உருவாக்கப்பட கட்சி தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதன் தலைவராக நீங்கள் விரும்பிய வீர மகன் அமைச்சர் றிசாத் அவர்கள் என்பது மக்களுக்கு தெரியும் இப்படி சமுதாயத்துக்காக நீங்கள் உருவாக்கி கட்சியை நீங்களே நீதிமன்றத்தில் நிறுத்தினால் உங்களின் இலட்சியம் எப்படி நிறைவேறும் என்று சிந்தித்து பாருங்கள்

எமது சமுதாயத்துக்காக உருவான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலையை பாருங்கள் அது இன்று மக்கள் மனதில் இல்லாமல் போய்விட்டது அதன் தலைவரின் சுயநல போக்கை பாருங்கள் அந்த கட்சியில் இருப்பவர்களை பாருங்கள் அந்த கட்சியின் அடிநாதம் ஹசன் அலி எங்கே அவருக்கு ஹக்கிம் செய்த துரோகத்தனத்துக்கு ஹசன் அலி உங்களை போல் நீதிமன்றம் செல்லவில்லை காரணம் தான் வளர்த்த மரம் நீதிமன்றத்தில் நிற்க கூடாது என்று அது போல் நீங்கள் வளர்த்த மயிலுக்கு உங்களால் அன்பு காட்ட முடியாமல் நீதிமன்றம் சென்றால் மற்றவர்களின் நிலையை எப்படி புரிந்து கொள்வீர்கள் என்பது தெரியாது எனவே ஹசன் அலி அவர்களின் மனித நேயத்தை சிந்தித்து உங்கள் கட்சியிக்கு நீங்கள் அன்பு காட்ட முன் வர வேண்டும்

கட்சி என்பது எவரின் சொத்தும் அல்ல அது மக்களின் சொத்து அதில் அதிகாரத்தை திருட முளையும் போது தான் பிரச்சினையே உருவாகிறது அப்படி ஒரு நிலையை கறுத்த ஆடுகள் சில திருட நினைத்து இன்றும் சதி செய்து கொண்டு இருப்பதாகவும் உங்கள் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முனைவதாகவும் மக்கள் பேசுகின்றனர் அந்த ஆடுகள் விரைவில் புச்சனிடம் போய் விடும் கவலைப்பட வேண்டாம் நீங்கள் நடந்தவைகளை மறந்து அமைச்சர் றிசாத் அவர்களுடன் சமுதாயத்தின் நலனுக்காக இனைந்து செயல்பட முன் வர வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

சகோதரர் ஹமீட் அவர்களே நீங்கள் தொலைக்காட்சி ஊடாக அமைச்சர் றிசாத் மீது பல குற்றங்களை சொல்கின்ற போதும் அவைகளை உறுதிப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க உங்களால் முடியவில்லை அதனால் நீங்கள் அமைச்சர் றிசாத் அவர்களின் எதிரியின் அஜந்தாவில் இயங்குவதாக சந்தேகப்பட வேண்டிய நிலை உள்ளது

அமைச்சர் றிசாத் மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதி கொடுத்து அரசியல் வியாபாரம் செய்து மஹிந்தயிடமோ ரனிலிடமோ நோர்வேயிடமோ இந்தியாவிடமோ பணம் வேண்டவில்லை அவர் மிகவும் கஸ்டப்பட்டு சுயமரியாதையுடன் தொழில் செய்து தேடிய பணமே அவரிடம் உள்ளது அரசியலுக்காக அமைச்சர் றிசாத் பணம் வேண்டியதாக ஆதாரம் இருந்தால் கூறுங்கள் மற்றவர்களின் கதை கேட்டு கேடி ரங்கா முன் பேசாதீர்கள் அன்னியன் எம்மை வழி கெடுத்து விடுவான்

எனவே சகோதரர் ஹமீட் அவர்களே பதவி பணம் என்பது அல்லாஹ் தருவது அதை மறந்து நடந்து கொள்ளக்கூடாது இந்த உலகம் நிரந்தரமற்றது நாம் இன்னும் சில நிமிடங்களில் மௌத்தாகி பஞ்சு மெத்தை மேல் படுத்த நாம் மண் மெத்தையில் நிரந்தரமாக படுக்கும் நிலை வரலாம் அல்லாஹ்வுக்கு பயந்து நாம் வாழ வேண்டும் மண்னறையில் எம்மோடு குடியிருக்க வரும் நன்பர்கள் எமது நல்ல காரியங்களே அன்றி இந்த உலகில் மனிதன் விரும்பும் பணமோ பதவியோ அல்ல என்பது உங்களுக்கு நன்கு தெரியும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

எனவே அல்லாஹ்வுக்காக நடந்தவைகளை மறந்து எமது எதிர்கால சமுதாயத்தின் நலனுக்காக அரசியலில் போராடிக்கொண்டு இருக்கும் உங்கள் சகோதரர் #நீங்கள் #விரும்பிய #அகில #இலங்கை #மக்கள் #காங்கிரஸ் #தலைவர் #அமைச்சர் #றிசாத் அவர்களுடன் இனைந்து நீங்கள் செயல்பட வேண்டும் என்பது எனது ஆசை அதற்காக உங்கள் கட்சிக்கு எதிராக நீங்கள் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளையும் நீங்கள் மீள் பரீசிலிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதுடன் எனது கருத்துக்கள் உங்கள் மனதை பாதிக்குமானால் என்னை மன்னித்து கொள்ளுங்கள்

இப்படிக்கு

உங்கள் சகோதரர் — ஜெமீல் அகமட்

Image title

Tags :
comments