ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • May 30, 2018
  • 556
  • Aroos Samsudeen
ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

(எஸ்.எம்.அறூஸ்)

மலேசியாவில் ஜூன் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள பெண்களுக்கான ஆசியக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியளிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியிலிருந்து இரண்டு வீராங்கனைகள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் விலகிக் கொண்டுள்ளனர்.

அணித்தலைவி சாமரா அத்தப்பத்து மற்றும் அமா காஞ்ஞனா ஆகிய இருவருமே விலகியுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக ஹர்ஸித்த மாதவி, இனோக்கா ரணவிர ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அணித்தலைவி சாமரா அத்தப்பத்து விலகிக் கொண்டுள்ளதால் அணித்தலைவியாக சசிகலா சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியினர் நாளை வியாழக்கிழமை நாட்டிலிருந்து புறுப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வருமாறு

யசோதா மெண்டிஸ், அனுஸ்கா சஞ்சீவனி, ரொபிகா வென்டோர்ட், ஹாஸினி பெரேரா, சசிகலா சிறிவர்த்தன, நிலக்ஸி டி சில்வா, உதேஸிக்கா பிரபோதினி, சுகந்திக்கா குமாரி, ஒஸாதி ரணசிங்க, நிபுனி ஹன்ஸிக்கா, மல்ஸா சிஹானி, அச்சினி குலசூரிய, இனோசி பெர்ணான்டோ, ஹர்ஸித்தா மாதவி, இனோக்கா ரணவிர ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் அடங்குவதுடன் மேலதிக வீராங்கனைகளாக சிறிபாலி வீரக்கொடி, கவிஸா டில்காரி, சத்யா சாந்திபனி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Tags :
comments