டிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது

  • July 14, 2018
  • 267
  • Aroos Samsudeen
டிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது

அமெரிக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். இவர், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் 2006 ஆம் ஆண்டு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியவர் ஆவார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலின் போது இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக தனக்கு டிரம்ப் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் 1 இலட்சத்து 30 ஆயிரம் டொலர் தந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அங்கு அவர் வயது வந்தவர்களுக்கு கவர்ச்சியான நடனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி உற்சாகம் ஏற்படுத்துகிற ‘ஸ்ட்ரிப் கிளப்’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, மேடைக்கு வந்து தன்னை ஒரு ரசிகர் ஆபாசம் இல்லாத வகையில் தொடுவதற்கு அனுமதி அளித்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பான தகவலை அவரது வழக்கறிஞர் மைக்கேல் அவினாட்டி வெளியிட்டு உள்ளார். அதில் அவர், ´´இது திட்டமிட்ட நாடகம். அரசியல் ரீதியில் வஞ்சம் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். இது பெரும் ஏமாற்றத்தை தந்து உள்ளது. நாங்கள் அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் சந்திப்போம்´´ என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் ஸ்டார்மி டேனியல்ஸ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் ஏற்கனவே 2 வழக்குகள் தாக்கல் செய்து இருப்பது நினைவுகூரத்தக்கது.

Tags :
comments