சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

  • August 17, 2018
  • 1239
  • Aroos Samsudeen
சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தினால் நுஜா ஊடக அமைப்பினருக்கு 50 வீத விலைக் கழிவில் ஹஜ் பெருநாள் ஆடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனம் (ஏ.வீ.எம்) நுஜா ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு ‘மீடியா ஐம்பதுக்கு 50’ விலைக் கழிவில் ஆடைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (18) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முன்றலில் இடம்பெறவுள்ளது.

அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.வீ.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் எம்.றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் பைசால் இஸ்மாயில், பொருளாளர் ஜூல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள், நிறுவனத்தின் அதிகாரிகள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நுஜா ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு ஹஜ் பெருநாளை முன்னிட்டு; ஆடைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் நோக்குடன் அமைப்பின் தேசியத் தவிசாளர் றியாத் ஏ. மஜீத் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜுடன் பேசியதிற்கினங்க, ஊடகவியலாளர்களின் நலனைக் கருதிற் கொண்டு அவர்களின் சேவையினை கௌரவிக்கும் முகமாக அஸ்லம் பிக் மார்ட் நிறுவனம் 50 வீத விலைக் கழிவில் ஆடைகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வுகள் வியூகம் முகநூல் ரீ.வியின் ஊடக அனுசரணையில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

நவ,நாகரிக ஆடைகளின் இதயமாகத் திகழும் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தில் மிகவும் சலுகை விலையில் மக்கள் ஆடைகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர். மிக இளம் வயதில் இவ்வாறான முன்னணி நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிடன் இப்பிராந்தியத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு அதன் உரிமையாளரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜின் ஆளுமையும், அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளுமே காரணமாகும்.

comments