நுஜா ஊடக அமைப்பினருக்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட்டின் 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கிவைப்பு

  • August 19, 2018
  • 572
  • Aroos Samsudeen
நுஜா ஊடக அமைப்பினருக்கு சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட்டின் 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கிவைப்பு

(அகமட் எஸ். முகைடீன், பாறூக் சிஹான்)

நவநாகரிக ஆடைகளின் சம்ராஜ்யமாக திகழும் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தினால் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பினருக்கு (நுஜா) ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான 50 வீத விலைக் கழிவுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு ,ன்று (18) சனிக்கிழமை அஸ்லம் பிக் மார்ட் நிறுவன முன்றலில் நடைபெற்றது.

அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் (ஏ.பி.எம்) முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜ் தலைமையில் நடைபெற்ற ,ந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் றியாத் ஏ. மஜீத், பொருளாளர் சுல்பிக்கா ஷரீப் உள்ளிட்ட அமைப்பின் ஊடகவியலாளர்கள், நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் முகமாக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் (நுஜா) உறுப்பினர்களுக்கு ஹஜ் பெருநாள் ஆடைக் கொள்வனவிற்கான அஸ்லம் பிக் மார்ட் (ஏ.பி.எம்) நிறுவனத்தின் 50 வீத விலைக் கழிவுக்கான கூப்பன் வழங்கிவைக்கப்பட்டன.

ஊடகவியலாளர்களின் நலனில் அக்கரை கொண்டு செயற்படும் அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸ்லம் றியாஜின் மகோன்னத சேவையினை நுஜா ஊடக அமைப்பினர் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

Tags :
comments