8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள வைத்திய கலாநிதி நக்பர் பயணம்.

பைஷல் இஸ்மாயில் –

இந்தியா குஜராத் மானில அகமதாபாத்தில் நடைபெறும் 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் பயணமாகின்றார்.

60 நாடுகள் பங்குபற்றும் இந்த 8 வது உலக ஆயுர்வேத சர்வதேச ஆய்வு மாநாடு 13 ஆம் திகதி தொடர்க்கம் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வின்போது உலகளாவிய ரீதியில் 9 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதில் இலங்கை சார்பாகச் செல்கின்ற 40 பேர் அடங்கிய அதிகாரிகள் மற்றும் ஆயர்வேத வைத்தியர்கள் கொண்ட குழுவில் இலங்கை சார்பாக நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் ஆலோசகரும் உலக சுகாதார நிறுவனத்தின் நிபணத்துவ ஆலோசகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் ஆய்வுக் கட்டுரை ஒன்று சமர்ப்பிக்கபட்டு அதில் உரையாற்றவுள்ளார்.

இலங்கையிலுள்ள கிராமப் புரங்களில் வாழுகின்ற மக்களுக்கு சுதேச மருத்துவ முறையை எவ்வாறு கொண்டு சென்று அதனை மக்கள் மயப்படுத்தலாம் என்ற தலைப்பின் கீழ் தனது அனுபவ ரீதியான அந்த ஆய்வுக் கட்டுரை அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.