இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மாலிங்க தெரிவு

  • December 14, 2018
  • 242
  • Aroos Samsudeen
இலங்கை கிரிக்கெட் அணியின்  தலைவராக லசித் மாலிங்க தெரிவு

நியுஸிலாந்தில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவராக வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் உப தலைவராக விக்கட் காப்பாளரும், ஆரம்பத்துடுப்பாட்ட வீரருமான நிரோசன் திக்வல்ல பெயரிடப்பட்டுள்ளார்.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியில் 17 வீரா்கள் இடம்பெற்றுள்ளதுடன் இவ்வணிக்கான ஒப்புதலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

இலங்கை அணி தற்போது நியுஸிலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அங்கு விளையாடவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் அணித்தலைவராக தினேஸ் சந்திமால் கடமையாற்றவுள்ளார். டெஸ்ட் போட்டிகள் முடிந்ததும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கிரிக்கெட் ஆலோசனை குழுவும், கிரிக்கெட் தெரிவுக் குழுவும் பல மாற்றங்களை அணிக்குள் கொண்டு வருகின்றது. அந்த வகையில் லசித் மாலிங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அதிரடித் துடுப்பாட்ட வீரா் அலச குணரத்ன மற்றும் சகலதுறை வீரா் சீக்குக்கே பிரசன்ன ஆகியோரும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் தலைமையில் இலங்கை அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 2019 இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகளை கவனத்தில் கொண்டு அணித்தலைவர் மாற்றம் இடம்பெற்றிருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நியுஸிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணி வீரா்கள் விபரம்

1.) Lasith Malinga – Captain

2.) Niroshan Dickwella – Vice Captain

3.) Angelo Mathews

4.) Danushka Gunathilaka

5.) Kusal Janith Perera

6.) Dinesh Chandimal

7.) Asela Gunaratne

8.) Kusal Mendis

9.) Dhananjaya De Silva

10.) Thisara Perera

11.) Dasun Shanaka

12.) Lakshan Sandakan

13.) Seekkuge Prasanna

14.) Dushmantha Chameera

15.) Kasun Rajitha

16.) Nuwan Pradeep

17.) Lahiru Kumara

Tags :
comments