பிரதியமைச்சுப் பதவி வழங்கலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பா?

  • December 22, 2018
  • 316
  • Aroos Samsudeen
பிரதியமைச்சுப் பதவி வழங்கலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பா?

இன்று இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இராஜாங்க மற்றும பிரதியமைச்சர்கள் பதவி வழங்கலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்களுக்கு பிரதியமைச்சுப் பதவியை வழங்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இன்று இரவு இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டார்கள். இதில் பிரதமர் அளித்த வாக்குறுதிக்கு அமைய அப்துல்லாஹ் மஹ்றூபிற்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி கூட்டில் முக்கிய கட்சியாக காணப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று கட்சிப் போராளிகள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments