ஐமசுமு இன் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று

  • December 24, 2018
  • 179
  • Aroos Samsudeen
ஐமசுமு இன் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (24) நடைபெற உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
comments