வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு

  • December 24, 2018
  • 263
  • Aroos Samsudeen
வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம்பெற்றது.
\
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேராளர் மாநாட்டில், மூத்த அரசியல்வாதியும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசனலி மற்றும் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார், சிரேஸ்ட பிரதித் தலைவர் மிப்லார் மௌலவி உட்பட உயர்பீட உறுப்பினர்கள், நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த பேராளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், தனது தனிப்பட்ட தேவைகளுக்காக முஸ்லிம் காங்கிரசின் யாப்பினை சர்வதிகாரமான முறையில் மாற்றம் செய்தமையினை எதிர்த்து, முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியியேறிய முக்கியஸ்தர்களின் கடின உழைப்புடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளராக பசீர் சேகுதாவூத்தும், செயலாளர் நாயகமாக எம்.ரி.ஹசன் அலியும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு மாநாட்டு பிரகடனமும், தீர்மானமும் வாசிக்கப்பட்டு பேராளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சாய்ந்தமருதைச் சேர்ந்தவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பிடத்தைக் கொண்டவருமான முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் பிரதித் தலைவர்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டார். அத்தோடு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பஜ்றுதீன் உதவிப் பொருளாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேசிய அமைப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இர்பான் மொஹிதீன் தெரிவு செய்யப்பட்டார்.

“முஸ்லிம் தேசியத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்வோம்” எனும் லட்சியக் கோஷசத்துடன், முதல் முயற்சியாக கடந்த உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கு குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் கிடைத்திருந்தனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி எம்.ரி.ஹசன் அலியுடன் தூய முஸ்லிம் காங்கிரஸாக காட்டிக்கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் மற்றும் நிந்தவுர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹீர் இருவரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளவில்லை. மாறாக அமைச்சர் ரிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கட்சியில் பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என தெரியவருகின்றது.

.

Image 1 of வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடுImage 2 of வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடுImage 3 of வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடுImage 4 of வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடுImage 5 of வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடுImage 6 of வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு
Tags :
comments