தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை தரப்பு முழுமையாக வெளியேறுகின்றது.

  • December 25, 2018
  • 1226
  • Aroos Samsudeen
தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை தரப்பு முழுமையாக வெளியேறுகின்றது.

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அக்கட்சியிலிருந்து விலகிக்கொள்வது உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு தேசிய காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலரும் இராஜினாமாச் செய்து உதுமாலெப்பைக்கான தமது அதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேசசத்தில் எம்.எஸ்.உதுமாலெப்பைக்காகத்தான் தேசிய காங்கிரசுக்கு கூடுதலான மக்கள் வாக்களித்து வருவதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் உதுமாலெப்பையின் வெளியேற்றம் தேசிய காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தேசிய காங்கிரஸை விட்டு வெளியேறுகின்ற நிலையில் அக்கட்சி சார்பான பிரதேச சபை உறுப்பினர்களையும் இராஜினாமாச் செய்துவிட்டுப் போவதுதான் பொருத்தம் என்பதால் உடனடியாக தங்களது பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்யுமாறு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உறுப்பினர்களிடம் கேட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.எஸ்.ஜகுபர் பிரதித்தவிசாளராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உத்தியோகபுர்வமாக கட்சியிலிருந்து வெளியேறாத நிலையில் சிலரை இணைத்துக்கொண்டு அட்டாளைச்சேனைக்கு புதிய மத்திய குழுவை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா நியமித்துள்ளார்.

அத்தோடு தேசிய காங்கிரஸ் சார்பாக நியமிக்கப்பட்ட இரண்டு போனஸ் உறுப்பினர்களையும் இராஜினாமாச் செய்யுமாறும் புதிய மத்திய குழுவிடம் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

Tags :
comments