நுஜா ஊடக அமைப்பின் சுதந்திர தின நிகழ்வுகள்

  • February 3, 2019
  • 178
  • Aroos Samsudeen
நுஜா ஊடக அமைப்பின் சுதந்திர தின நிகழ்வுகள்

(ஜுல்பிகா ஷெரீப்)

இலங்கையின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு, தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் ( நுஜா) ஏற்பாடுசெய்த “சுபீட்சத்தை நோக்கிய சுதந்திரதினம் – 2019…” எனும் கருப்பொருளிலான சுதந்திரதின நிகழ்வுகள் நாளை காலை 08 மணியளவில், சாய்ந்தமருது “பிர்லியன்ட் முன்பள்ளி” மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம். அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் முன்னாள் பிரதேச செயலாளரும்,அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ. எல்.எம். சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ரமீஸ் அபூபக்கர் மற்றும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் செயலாளர் ஏ.பாவா, வர்த்தகமற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.ஜுனைதீன், ட்றீ கொன்ஸ்றக்சன் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.நஸார், முகாமைத்துவ உதவியாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை எம்.ஆர். எம். நௌபல், நஜாத் கொன்ஸ்றக்சன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.எம் நஜ்முடீன், நுஜா ஒன்றியத்தின் தவிசாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தேசியக்கொடி ஏற்றிவைப்பதோடு ஆரம்பமாக இருக்கும் நிகழ்வுகளில் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு விடயங்களும் இடம்பெறும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதுடன் “பிர்லியன்ட் முன்பள்ளி” மாணவர்கள் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு பலன் தரும் மரக்கன்று நடுதல் மற்றும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் எனும் தொனிப்பொருளில் விசேட உரை என பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டுள்ளதாக நுஜா ஊடக அமைப்பின் பொதுச் செயலாளர் பைசல் இஸ்மாயில் தெரிவித்தார்.

Tags :
comments