அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு Compactor இயந்திரம் வழங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை

  • February 6, 2019
  • 185
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு Compactor இயந்திரம் வழங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு Compactor இயந்திரங்களை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் விடுத்த இக்கோரிக்கையை அடுத்து Compactor இயந்திரங்களை வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 09.02.2019, ஆம் திகதி சனிக்கிழமை காலியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் வைத்து இந்த compactor இயந்திரங்கள் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

.இவ்விடயத்தில் துரிதமாக இயங்கி நடவடிக்கை எடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் கடந்த அரசாங்கத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை பல வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments