திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு

  • February 9, 2019
  • 166
  • Aroos Samsudeen
திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு

(அகமட் எஸ். முகைடீன்)

திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான இயந்திர தொகுதிகள் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (9) சனிக்கிழமை காலியில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நகிழ்வில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் 18 இயந்திர தொகுதிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு இதன்போது வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

– ஊடகப் பிரிவு –

Image 1 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வுImage 2 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வுImage 3 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வுImage 4 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வுImage 5 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வுImage 6 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வுImage 7 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வுImage 8 of திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்த இயந்திர தொகுதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு
Tags :
comments