மக்கள் காங்கிரஸினால் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வீ.சி.இஸ்மாயிலின் சிபார்சில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.

அட்டாளைச்சேனைக்கு மக்கள் காங்கிரஸின் தற்காலிக பொறுப்பாளராக செயற்படும் முன்னாள் நீதிபதியின் செயற்பாடு காரணமாகவே கம்பெரலிய திட்டத்தில் அட்டாளைச்சேனை இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று மக்கள் காங்கிரஸ் அட்டாளைச்சேனை முக்கியஸ்தர் ஒருவர் களம் பெஸ்டுக்குத் தெரிவித்தார்.

கடந்த வருடம் வர்த்தக அமைச்சினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் திட்டத்திலும் அட்டாளைச்சேனை பிரதேசம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்