முன்கூட்டிய பொதுத்தேர்தலுக்கு ஐ.தே.க. போர்க்கொடி!

  • March 13, 2019
  • 134
  • Aroos Samsudeen
முன்கூட்டிய பொதுத்தேர்தலுக்கு ஐ.தே.க. போர்க்கொடி!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் யோசனைக்கு ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

வரவு – செலவுத்திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் ஜூன் மாதமளவில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் யோசனை முன்வைக்கப்படலாம் என அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாகவும், பலகோணங்களிலும் பேசப்பட்டுவருகின்றன.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், நான்கரை ஆண்டுகள் முடிவடையும்வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அரசியல் சூழ்ச்சியின்போது வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாகவும் இது உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானமொன்றை நிறைவேற்றினால் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

இதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையிலேயே, ஐ.தே.கவின் பெரும்பானலான எம்.பிக்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

” ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படவேண்டும். அதற்கு முன்னர் தீடீரென பொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடாது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு பொதுத்தேர்தலை நடத்தலாம்” என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்துவருகின்றது.

Tags :
comments