அட்டாளைச்சேனையின் மூத்த முதல் எழுத்தாளர்தான் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் — தமிழ்மணி மானா. மக்கீன்

  • March 13, 2019
  • 273
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனையின் மூத்த முதல் எழுத்தாளர்தான் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் — தமிழ்மணி மானா. மக்கீன்

அட்டாளைச்சேனையின் மூத்த முதல் எழுத்தாளர்தான்
சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் — தமிழ்மணி மானா. மக்கீன்

ஆசுகவி அன்புடீன் அவர்களின் 50வது வருட இலக்கிய பொன்விழாக் கூட்டம் அண்மையில் அட்டாளைச்சேனையில் எம்.சிறாஜ் அகமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது அக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசிய பன்நூல்கள் ஆசிரியரும் நாடறிந்த எழுத்தாளருமான தமிழ்மணி மானா. மக்கீன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கிலங்கையில் உள்ள ஒவ்வோர் ஊரிலும் எழுத்துத் துறையிலும் இலக்கியத்திலும் பங்காற்றிய பல முன்னோடிகள் இருந்து வந்துள்ளார்கள். அந்த வகையில் அட்டாளைச்சேனையில் நடைபெறும் இந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேசுவதையிட்டு பெருமைப்படுகிறேன். இந்த ஊரின் முதல் மூத்த எழுத்தாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள்தான் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதிகளில் வாழும் முஸ்லிங்கள் பரவலாகவும் பெரும்பாலும் இலக்கிய ஆர்வளர்களாகவும், கவிஞர்களாகவும், கதாசிரியர்களாகவும் காணப்படுகிறார்கள். தமிழ்மொழிக்கு அவர்கள் ஆற்றி பங்களிப்பு அளப்பரியது. அதனை இந்நாட்டு இலக்கியவாதிகள் இலகுவில் மறக்கமுடியாது. ஆசுகவி அன்புடீன் அவர்களின் இலக்கிய பணியில் அவர் 50 ஆண்டுகளை கடந்து இன்று நடைப்பெறும் இப்பொன்விழாவில் அன்னாரை நான் வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.

மேற்படி இவ்விழாவில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கிம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் அத்துடன் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.ஏம். அதாவுல்லா, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பா.உ. ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனீபாவும், புத்தக வெளியீட்டு உரையை எஸ். எல். மன்சூர் அவர்களும், ஆய்வுரையை சிராஸ் மஸ்ஹூர், ஏற்புரையை ஆசுகவி அன்புடீன் அவர்கள் உட்பட பல முக்கிய இலக்கிய வாதிகள் கவிஞர்களும், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டு அவர்களின் கருத்துரைகளையும் வாழ்த்துரைகளையும் வழங்கிவைத்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags :
comments