அட்டாளைச்சேனையை புறக்கணிக்கும் அமைச்சர் ரிசாத் – தேர்தல் குழுத்தலைவர் கவலை தெரிவிப்பு

  • April 1, 2019
  • 399
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனையை புறக்கணிக்கும் அமைச்சர் ரிசாத் – தேர்தல் குழுத்தலைவர் கவலை தெரிவிப்பு

அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களினால் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் மூலம் அம்பாரை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களுக்கும் வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ள போதும் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படாமை குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாரை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த அமைச்சர் ரிசாத் அக்கரைப்பற்று மக்களுக்கு சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை தேர்தல் குழுத்தலைவர் அஸ்வர் அட்டாளைச்சேனைக்கும் வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைக்குமாறு அமைச்சர் ரிசாத் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இதற்குப்பதில் அளித்த அமைச்சர் அவர்கள், அட்டாளைச்சேனையில் கட்சிக்குள் பல குழுக்கள் செயற்படுகின்றது. அவர்களுக்கிடையில் ஒற்றுமையில்லை. ஒற்றுமை என்று ஏற்படுகின்றதோ அன்றுதான் நான் அட்டாளைச்சேனைக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தப்பதிலை சற்றும் எதிர்பார்க்காத தேர்தல் குழுத் தலைவர் அஸ்வர் உடனடியாகவே அவ்விடத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

எந்த பிரதேசத்திற்குள்தான் பிரச்சினைகள் இல்லாமலில்லை. ஏன்? அட்டாளைச்சேனையை மாத்திரம் அமைச்சர் மாற்றுக்கண் கொண்டு பார்க்கின்றார். பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கு தியாகத்துடன் நாங்கள் வேலை செய்தபோதும் அமைச்சர் அவர்களின் பேச்சு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் கட்சிக்கு வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்ட கதையாக மாறியுள்ளதாக அஸ்வர் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் நான்கு அணிகள், சாய்ந்தமருதில் மூன்று அணிகள், கல்முனையில் இணர்டு அணிகள், பொத்துவிலில் இணர்டு அணிகள், இறக்காமத்தில் இரண்டு அணிகள், சம்மாந்துறையில் இரண்டு அணிகள் என்று மக்கள் காங்கிரஸிற்குள் பிரச்சினைகள் இருக்கின்றபோது அட்டாளைச்சேனையை மாத்திரம் குறிப்பிட்டு வாழ்வாதாரப் பொருட்கள் ஏனைய ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.

Tags :
comments