முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன், அடிப்படைவாத அமைப்புக்கள் வளர்ச்சியடைகின்றது

  • April 28, 2019
  • 264
  • Aroos Samsudeen
முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன், அடிப்படைவாத அமைப்புக்கள் வளர்ச்சியடைகின்றது
(இராஜதுரை ஹஷான்)
மத போதனைகளை போதிக்கின்றோம் என்ற பெயரில் செயற்படும்  அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் இழுத்தடிக்கப்படாமல் தடை செய்து சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் என இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர்  அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அடிப்படைவாத அமைப்புக்கள்    வளர்ச்சியடைகின்றது என்றும், கிழக்கு மாகாணத்தில்  பெரும்திரளான   ஆயுதங்கள்  காணப்படுகின்றமை பாரிய அழிவினை ஏற்படுத்தும் என்று    நாங்கள் தொடர்ந்து  குறிப்பிட்ட வேளை அரசாங்கத்தினால் இனவாதிகளாக   சித்தரிக்கப்பட்டோம்.
தேசிய பாதுகாப்பிற்கும், தேசிய  நல்லிணக்கத்திற்கும் இடையிலான வேறுப்பாட்டை தெரிந்துக் கொள்ளாமல் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமையின் விளைவையே இன்று நாட்டு மக்கள் எதிர்க்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
Tags :
comments