முஸ்லிம் காங்கிரஸ் போராளி ஒருவரின் வாக்குமூலம்.

  • May 3, 2019
  • 365
  • Aroos Samsudeen
முஸ்லிம் காங்கிரஸ் போராளி ஒருவரின் வாக்குமூலம்.

அரசியலுக்கு அப்பால்
அமைச்சரே (Rishad Bathiudeen) உங்களை நான் நேசிக்கிறேன்.

மர்ஹும் அஷ்ரப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் வடிவில் ஒரு ஆளுமைக்கான குரலின் அத்திவாரத்தை கடந்த வாரம்தான் கண்டு கொண்டேன்.

இருப்பினும் உங்களைத் தேசிய தலைவன் என்பதை விட சமூகத்தின் தலைவன் என்றே சொல்வேன்.

ஒரு ஊடக நிறுவனத்துக்குள்ளே சென்று “நீங்கள் ஒரு குப்பை ஊடகம்” என்றும் “நீங்கள் ஒரு இனவாத ஊடகம்” என்றும் அடித்துச்சொல்ல வேறு எந்த ஆளுமைக்கும் தைரியம் வராது. உங்கள் செவ்வியைப்போலவே மஹிந்த தேஷப்பிரிய விடமும் அந்த ஊடகவியலாளர்கள் மாட்டிக் கொண்டதை காணக்கிடைத்தது.

ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரலாய் அன்று உங்கள் குரல் ஒலித்ததில் ஒரு இஸ்லாமியனாய் பெருமைப்படுகிறேன்.

குறிப்பு: இது அரசியலுக்கு அப்பால் மனிதநேயமிக்க பதிவு.

இவ்வாறு அஸ்பக் நஜீம் தெரிவித்தார்.

Tags :
comments