செங்கலடி பகுதியில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரின் வக்கீர குணமுள்ள செயல்பாடு!

  • May 4, 2019
  • 297
  • Aroos Samsudeen
செங்கலடி பகுதியில்  முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும்  பிரதேச சபை உறுப்பினரின் வக்கீர குணமுள்ள செயல்பாடு!

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் முஸ்லிம்கள் முற்றாக முகம் மூடுவதற்கு தடை விதிக்கும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனின் ஏற்பாட்டில் அப்பகுதி இளைஞர்களால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது இடங்கள், அரச கட்டடங்கள், பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் சமூகம் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனின் ஏற்பாட்டில் அப்பகுதி இளைஞர்களால் எடுக்கப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை அவர் முஸ்லிம் சமூகத்தோடு எப்படியான வக்கீர குணத்துடன் இருந்திருக்கிறர் என்பதை வெளியாட்டுகின்றது என நடுநிலை மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
comments