ரிஷாதின் மன வேதனை….! கவலை வெளியிட்டார் ரஞ்சன் !!

  • May 4, 2019
  • 323
  • Aroos Samsudeen
ரிஷாதின் மன வேதனை….! கவலை வெளியிட்டார் ரஞ்சன் !!

( ஏ. எச். எம். பூமுதீன் )

முஸ்லிம்களை மன வேதனைப்படுத்தும் கருத்துக்களை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். அக் கருத்து முஸ்லிம்களை கடும் வேதனைக்குட்படுத்தி இருந்தது.

பள்ளிவாசல்களில் கத்துவதை ( அதான் ஒலிப்பதை) நிறுத்த வேண்டும் என்று கடும் கோபத்துடன் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில், அவசரமாக பிரதமரை தொடர்பு கொண்ட – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , ‘ரஞ்சனின் கருத்து என்னையும் எனது சமூகத்தினையும் வேதனை படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்..

அதேபோல், பலரும் – இராஜாங்க அமைச்சர் ரஞ்சனை தொடர்பு கொண்டு அவரது கருத்தை விமர்சித்திருந்தனர்.. இதனையடுத்து நேற்று அவசர அவசரமாக ஊடகங்கள் முன் தோன்றிய ரஞ்சன் ராமநாயக்க, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் – தனது கருத்து தொடர்பில் ஆழ்ந்த வேதனையை தெரிவித்துள்ளார்..

” எனது கருத்தை அலட்டிக் கொள்ள வேண்டாம் ” என்றும் அவர் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.. பிரதமரிடம் — அமைச்சர் ரிஷாட் கீழ்க்கண்டவாறு உரையாடியிருந்தார்…

பயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் றிஷாட் பதியுதீன், இது குறித்து பிரதமரிடம் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

தொலைபேசியில் பிரதமரை நேற்று ( 3 ) தொடர்பு கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன் , விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்கள் செய்த வேலைக்காக முழு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலைக்குரியது. குற்றவாளிகளைக் கண்டறிந்து பூண்டோடு அழித்தொழிக்க முஸ்லிம்கள் துணிந்து களமிறங்கியுள்ளனர்.

அப்பாவிகளைக் கொல்லும் இவ்வாறான வெறித்தனங்கள் இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம் உலமாக்கள், பெரியோர் உட்பட முஸ்லிம் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் இந்தக் கயவர்களின் தாக்குதல்களுக்கு கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி சகலரையும் வேதனை பீடித்துள்ள இச்சூழ் நிலையில் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளிகளாகக் குற்றஞ்சாட்டுவதாயுள்ளது. இவரின் கருத்துக்கள் சமூகங்களுக்கிடையில் அரசாங்கம் கட்டியெழுப்ப முனையும் நல்லிணக்கம், மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வைத் தூரப்படுத்தும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.

எனவே குற்றவாளிகளை முழுமையாகக் கண்டுபிடித்து இதன் பின்னணிகளை வெளிப்படுத்தும் வரை இராஜாங்க அமைச்சர் இவ்வாறான வீண் விமர்சனங்களையும் சந்தேகப் பார்வைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டுமென அமைச்சர் றிஷாட் – பிரதமரிடம் தெரிவித்திருந்தார்…

Tags :
comments