வாப்பாவை காப்பாற்ற கெஞ்சிய சின்ள மகன்

  • May 16, 2019
  • 394
  • Aroos Samsudeen
வாப்பாவை காப்பாற்ற கெஞ்சிய சின்ள மகன்
இந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீரின் 4 பிள்ளைகள்,
தனது தந்தையை காப்பாற்ற எதுவும் செய்யாத பொலிஸ், குறைந்தது வெட்டு பட்டு கிடந்த தந்தையை வைத்திய சாலைக்காவது கொண்டு செல்ல உதவி இல்லை,
பௌத்த இனவாத ரவுடிகளால் பத்த வைத்த தனது பாதி தீ பற்றிய லாரியில கொண்டும் செல்லும் போது பாதியிலேயே உயிர் இலந்துள்ளார் ,
இந்த சின்ன மகன் வாப்பாவை காப்பாத்துங்க எண்டு கத்தும் போது பொலிஸ் காரர்கள் வேரு யாருடனோ தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்துள்ளனர், இதை சொல்லும் போது அந்த குழந்தையின் குரல் நடுங்கி உள்ளது .
எங்களது உயிர் போன்றதுதான் மற்றவர்களின் உயிரும் என்பதை புரிந்துக்கொள்ள இன்னும் எத்தனை அனாதைகள் உருவாக வேண்டும்..?
சிங்களம் , தமிழ், முஸ்லிம் என்ன வேற்றுமை இந்த அனாதைகளுக்கு புரியுமா?
நாத்தன்டியிலிருந்து கவட்ராமுல்லை வரை எத்தனை யுத்த பீரங்கிகள் ,பொலிஸ் , ராணுவம் எவ்வளவு பெயர் இருந்தாலும் , ஊரடங்கு சட்டம் போட்டாலும் , கொட்ராமுல்லை முஸ்லிம்களிடம் இருந்த பயம் , பாதுகாப்பற்ற தன்மை, அவர்களது கண்களில் இருந்தது ‪anurada godakoda‬
Tags :
comments