தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கும், அதற்கு உதவுபவர்கள் மரண தண்டனை விதிக்க வேண்டும் – சஜித்

  • May 16, 2019
  • 47
  • Aroos Samsudeen
தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கும், அதற்கு உதவுபவர்கள் மரண தண்டனை விதிக்க வேண்டும் – சஜித்
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள், அதற்கு உதவுபவர்கள் என அனைவருக்கும் தராதரம் பாராது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டில் மீண்டும் ஒரு பேரவலத்தை ஏற்படுத்துவதற்கு சில அரசியல் சக்திகள் முனைப்பு காட்டி வருகின்றன.
கடந்த 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களின் கடைகள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன் உயிர்ச் சேதங்களும் விளைவிக்கப்பட்டன.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு எழுச்சி பெற்றனர்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின் வன்முறைகளில் ஈடுபட்டு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அவ்வாறான ஓர் பலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டுமா என்பதனை நாம் மதிநுட்பத்துடன் சிந்தித்து பார்க்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :
comments