ICC உலகக் கிண்ணத்துக்கான பாடல் மற்றும் பரிசுத் தொகை வெளியீடு

  • May 19, 2019
  • 229
  • Aroos Samsudeen
ICC உலகக் கிண்ணத்துக்கான பாடல் மற்றும் பரிசுத் தொகை வெளியீடு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடலையும், சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகையையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.  

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில்எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள்கலந்துகொள்கின்றன.

46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், ஏனைய அணியுடன்தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதனிடையே, உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து 10 இலட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 12 நாட்கள்எஞ்சியிருப்பதால் ரசிகர்கள் உச்சக் கட்ட பரபரப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை உலகக் கிண்ணத்துக்கானஉத்தியோகபூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

”ஸ்டான்ட் பை” என்ற தலைப்பில்உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகி லோரின் மற்றும் ருடிமென்டல் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

 

 

Tags :
comments