கூட்டு எதிரணியின் கோரிக்கை ‘அவுட்’ நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

சபை அமர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, இன்றைய தினமே நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும் திகதியை அறிவிக்குமாறு கூட்டு எதிரணி உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டு எதிரணியின் கோரிக்கைக்கு சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியல்ல கடும் எதிர்ப்பை வெளியிட்டார். நாளைய தினமே கூட்டத்தை நடத்த முடியும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து விவாதத்துக்கான திகதி நாளை நிச்சயம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

இதனால் கடுப்பாகிய கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் இன்றைய தினத்துக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றம் நாளை காலைவரை ஒத்திவைக்கப்பட்டது.